×

தென்திருப்பேரையில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பாஜவினர் முற்றுகை போராட்டம்

ஸ்ரீவைகுண்டம் : தென்திருப்பேரையில் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி பாஜவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்திருப்பேரை பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இக்கடை அருகில் நவதிருப்பதிகளில் ஒன்றான மகர நெடுங்குழைக்காதர் கோயில், நவகைலாசங்களில் ஒன்றான சிவன் கோயில், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன. இதனால் டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களால் பொதுமக்களும், பக்தர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ சார்பில் தென்திருப்பேரை டாஸ்மாக் கடையை மூட வேண்டுமென வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில், 40 நாட்களில் உரிய முடிவெடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தெற்கு மாவட்ட பாஜ தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பாஜவினர், தென்திருப்பேரை டாஸ்மாக் கடையை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஏரல் தாசில்தார் கோபால் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்‌. வரும் வெள்ளிக்கிழமை தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். எனவே போராட்டத்தை கைவிடுமாறு அவர் கேட்டுக் கொண்டார். அப்போது அதுவரை டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என பாஜவினர் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து சமாதான கூட்டத்தில் முடிவெடுக்கும் வரை டாஸ்மாக் மதுக்கடை செயல்படாது என உறுதி அளித்தார். இதையேற்று பாஜவினர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.

முற்றுகை போராட்டத்தில் பாஜ நிர்வாகிகள் சிவமுருகன் ஆதித்தன், விவேகம் ரமேஷ், சங்கர், ஆறுமுகம், உலகநாதன், ராஜா, சத்யசீலன், செல்வராஜ், ரேவதி, சரஸ்வதி, குமரேசன், நவமணிகண்டன், மணிகண்டன், முத்துக்குட்டி, முருகேச பாண்டியன், முத்துராமலிங்கம், நெல்லையம்மாள், முருகன் என்ற பரமசிவம், முத்தையா, தாஸ், கண்மணி, மாரித்தங்கம், சரஸ்வதி, வெங்கடேஷ், சபரிமலை, ராஜ்குமார், பாலசுப்பிரமணியன், வெங்கடேஷ், சுப்பிரமணியன், சிவராமன், லோகு, விக்னேஷ், செல்வகுமரன், சரஸ்வதி, ஜெயசிம், பானுமதி, ராஜா, பாமணி, சுரேஷ்குமார், ராஜா, காளிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாஜ தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கூறுகையில், தென்திருப்பேரை டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பாஜ போராட்டம் அறிவித்த பிறகு இதுவரை 3 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உறுதியளித்தபடி டாஸ்மாக் கடையை அகற்றாததை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். தற்போது தாசில்தார் உறுதிமொழியை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு இருக்கிறோம். டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் அடுத்தக்கட்டமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார்.

The post தென்திருப்பேரையில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பாஜவினர் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Tags : South Thiruperai ,BJP ,Tasmac ,Srivaikundam ,Tenthiruperai ,Makara Nedungukhaadhar Temple ,Navathirupathis ,Shiva Temple ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...